< Back
கிரிக்கெட்
இந்திய வீரர்களை பாராட்டிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன்

image courtesy; AFP

கிரிக்கெட்

இந்திய வீரர்களை பாராட்டிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன்

தினத்தந்தி
|
31 Jan 2024 4:54 PM IST

2023-ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

சிட்னி,

சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஒவ்வொரு வருடமும் ஐசிசி விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வரிசையில் கடந்த வருடத்தில் அசத்திய கிரிக்கெட்டர்களுக்கான விருதை ஐசிசி சமீபத்தில் அறிவித்தது. அதில் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக பேட் கம்மின்ஸ் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு சிறந்த வீரருக்கு வழங்கப்படும் சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபி விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஐசிசி இணையத்தில் பேசிய கம்மின்ஸ், விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் களத்தில் எதையும் எளிதாக விடாமல் இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுக்கொடுக்கும் திறமையை கொண்டிருப்பதாக பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- "விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து சூப்பராக செயல்படக் கூடியவர்கள். அவர்களை நீங்கள் எப்போதும் போட்டியிலிருந்து வெளியே வைக்க முடியாது. அவர்கள் எப்போதும் தன்னுடைய அணியை தடுமாற்றத்திலிருந்து இழுத்துக்கொண்டு வந்து வெற்றியை பெற்றுக்கொடுக்கும் வழியை கண்டறியக் கூடியவர்கள்" என்று கூறினார்.


மேலும் செய்திகள்