< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு...யாருக்கெல்லாம் இடம்..?

image courtesy:AFP

கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு...யாருக்கெல்லாம் இடம்..?

தினத்தந்தி
|
1 May 2024 2:32 PM IST

டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சிட்னி,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்தப் போட்டி தொடரில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை இன்றைக்குள் (மே 1ம் தேதி) அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) அறிவித்துள்ளது.

ஏற்கெனவே நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தங்களது அணிகளை அறிவித்துவிட்டன. இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்க உள்ள 15 வீரர்கள் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. மிட்செல் மார்ஷ் தலைமையிலான அந்த அணியில் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட், மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ், வார்னர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இருப்பினும் ஸ்டீவ் சுமித், ஜேசன் பெர்ஹண்ட்ராப், மேட் ஷார்ட் போன்ற முன்னணி வீரர்களும், நடப்பு ஐ.பி.எல். சீசனில் அதிரடியாக விளையாடி வரும் ஜேசன் பிரேசர் மெக்கர்க்கும் அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆஸ்திரேலிய அணி விவரம் பின்வருமாறு:-

மிட்செல் மார்ஷ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், பேட் கம்மின்ஸ், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஷ், மேக்ஸ்வெல், ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட், டேவிட் வார்னர் மற்றும் ஆடம் ஜம்பா.

மேலும் செய்திகள்