< Back
கிரிக்கெட்
ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன்-க்கு கொரோனா தொற்று உறுதி

Image : AFP 

கிரிக்கெட்

ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன்-க்கு கொரோனா தொற்று உறுதி

தினத்தந்தி
|
24 Jan 2024 2:23 PM IST

வெஸ்ட் இண்டீஸ் -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

பிரிஸ்பேன்,

வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

.இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் மற்றும் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் அடுத்த 24 மணி நேரத்தில் கொரோனா நெகடிவ் முடிவு வரவில்லை என்றாலும் அவர்களால் 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்