< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
அமைதி புறா ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பேட், ஷூ பயன்படுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவுக்கு தடை
|25 Dec 2023 1:51 PM IST
உஸ்மான் கவாஜாவிற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் கம்மின்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
சிட்னி,
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, உஸ்மான் கவாஜா தனது ஷூவில் அனைத்து உயிர்களும் சமம் என எழுதியிருந்தார். அவர் அந்த ஷூ அணிந்து போட்டியில் பங்கேற்க ஐசிசி தடை விதித்த நிலையில், கையில் கருப்பு பட்டை அணிந்தபடி முதல் டெஸ்டில் பங்கேற்ற கவாஜா, ஐசிசி-க்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்திருந்தார்.
மேலும் அமைதி புறா ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பேட்டையும், ஷூவையும் பயன்படுத்த அவர் ஐசிசி-யிடம் அனுமதி கோரி இருந்தார். இந்நிலையில், அமைதி புறா ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பேட்டையும், ஷூவையும் பயன்படுத்த அவருக்கு அனுமதி வழங்க ஐசிசி மறுத்துள்ளது.
இந்நிலையில் அவருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் கம்மின்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.