< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கேமரூன் கிரீனுக்கு சிறுநீரக நோய் பாதிப்பு
|15 Dec 2023 4:17 AM IST
தனது சிறுநீரகங்களால் ரத்தத்தை சுத்தம் செய்ய முடியாது என கேமரூன் கிரீன் தெரிவித்துள்ளார்.
சிட்னி,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன், தனக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் பாதிப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தாயின் வயிற்றில் 19 வார கருவாக இருந்தபோதே தனக்கு சிறுநீரக நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதாகவும், 12 வயதுக்கு மேல் அவர் வாழ வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது சிறுநீரகங்களால் ரத்தத்தை சுத்தம் செய்ய முடியாது எனக் கூறிய கேமரூன் கிரீன், 5 நிலைகளைக் கொண்ட சிறுநீரக நோய் பாதிப்பில், தனக்கு 2-ம் கட்ட பாதிப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.