< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்திற்கு வீரர்கள் இன்றி தவிக்கும் ஆஸ்திரேலியா
|28 May 2024 1:51 AM IST
தற்போதைக்கு 8 வீரர்கள் மட்டுமே பயிற்சி போட்டிக்கு தயார் நிலையில் உள்ளனர்.
நியூயார்க்,
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன. ஆஸ்திரேலிய அணி தனது பயிற்சி ஆட்டங்களில் நாளை நமிபியாவையும், 31-ந்தேதி வெஸ்ட் இண்டீசையும் சந்திக்கிறது.
கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், மார்கஸ் ஸ்டோனிஸ் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் தொடர்ச்சியாக ஆடியதால் அவர்களில் பெரும்பாலானோர் பயிற்சி ஆட்டத்திற்கு ஓய்வு கேட்டுள்ளனர்.
இதனால் தற்போதைக்கு 8 வீரர்கள் மட்டுமே பயிற்சி போட்டிக்கு தயார் நிலையில் உள்ளனர். குறைவான எண்ணிக்கையில் வீரர்கள் இருப்பதால் பயிற்சி ஆட்டத்திற்கு தங்களது பயிற்சியாளர்களையும் பயன்படுத்த வேண்டி வரலாம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் கூறியுள்ளார்.