< Back
கிரிக்கெட்
பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

image courtesy; AFP

கிரிக்கெட்

பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

தினத்தந்தி
|
3 Dec 2023 7:51 PM IST

இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் லான்ஸ் மோரிஸ் அறிமுக வீரராக இடம்பெற்றுள்ளார்.

சிட்னி,

பாகிஸ்தான் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் இடையிலான முதலாவது டெஸ்ட் வரும் 14-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது. இதற்கான 14 வீரர்கள் கொண்ட ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் லான்ஸ் மோரிஸ் அறிமுக வீரராக இடம்பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி விவரம் பின்வருமாறு;-

பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலந்து, அலெக்ஸ் கேரி, கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசாக்னே, நாதன் லயன், மிட்செல் மார்ஷ், லான்ஸ் மோரிஸ், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்.

மேலும் செய்திகள்