< Back
கிரிக்கெட்
டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் சரிவை சந்தித்த ஆஸ்திரேலியா, இந்தியா... காரணம் என்ன?
கிரிக்கெட்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் சரிவை சந்தித்த ஆஸ்திரேலியா, இந்தியா... காரணம் என்ன?

தினத்தந்தி
|
7 Feb 2024 6:51 PM IST

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.

துபாய்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 4-ம் தேதி தொடங்கியது. 4 நாட்கள் மட்டுமே நடைபெற்ற இந்த போட்டியில் நியூசிலாந்து 281 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் நியூசிலாந்து-தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நிறைவடைந்ததை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை தற்போது ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் 4-வது இடத்தில் இருந்த நியூசிலாந்து கிடுகிடுவென முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் சரிவை சந்தித்துள்ளன.

தற்போதைய டெஸ்ட் சாப்பியன்ஷிப் புள்ளி பட்டியலின் விவரம் பின்வருமாறு;-

1. நியூசிலாந்து - 66.66 புள்ளிகள்

2. ஆஸ்திரேலியா- 55.00 புள்ளிகள்

3.இந்தியா- 52.77 புள்ளிகள்

4.வங்காளதேசம் -50.00 புள்ளிகள்

5.பாகிஸ்தான் -36.66 புள்ளிகள்

6.வெஸ்ட் இண்டீஸ் - 33.33 புள்ளிகள்

7.தென் ஆப்பிரிக்கா- 33.33 புள்ளிகள்

8.இங்கிலாந்து-25.00 புள்ளிகள்

9. இலங்கை-00.00 புள்ளிகள்

மேலும் செய்திகள்