இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் விலகல்..!
|இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது.
மும்பை,
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கு பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் கேஸ்லேவுட் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்த ஹேஸ்லேவுட் காயம் காரணமாக முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவருக்கு ஏற்பட்ட காயம் குணமாக இன்னும் சிறிது காலம் எடுக்கும் என்பதால் எஞ்சிய போட்டிகளில் இருந்து அவர் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 2வது டெஸ்டில் பேட்டிங் ஆடும் போது முகமது சிராஜ் வீசிய பந்தில் தலையில் காயம் அடைந்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னரும் அடுத்த டெஸ்ட் போட்டியில் ஆடுவது சந்தேகம் என கூறப்படுகிறது.