< Back
கிரிக்கெட்
100-வது டெஸ்டில் விளையாடிய புஜாராவுக்கு ஆஸி. வீரர்கள் கையெழுத்திட்ட டீம் ஜெர்சியை பரிசளித்த கம்மின்ஸ்
கிரிக்கெட்

100-வது டெஸ்டில் விளையாடிய புஜாராவுக்கு ஆஸி. வீரர்கள் கையெழுத்திட்ட டீம் ஜெர்சியை பரிசளித்த கம்மின்ஸ்

தினத்தந்தி
|
19 Feb 2023 10:52 PM IST

புஜாரா தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடினார்.

டெல்லி,

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்த போட்டியில் செதேஸ்வர் புஜாரா தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அவரை பெருமைப்படுத்தும் விதமாக ஆஸ்திரேலிய அணி, தங்களது வீரர்கள் கையெழுத்திட்ட ஆஸ்திரேலிய ஜெர்சியை புஜாராவுக்கு பரிசளித்தது.

இந்த ஜெர்சியை ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் புஜாராவுக்கு வழங்கினார். இந்த புகைப்படத்தை பிசிசிஐ தனது டிவீட்டரில் பகிர்ந்து உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை தனது 100-வது டெஸ்டில் விளையாடியதற்காக ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் சேட்டேஷ்வர் புஜாராவுக்கு ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் ஜெர்சியை பரிசாக வழங்கினார்.

மேலும் செய்திகள்