< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
பார்வை குறைபாடு உள்ளோருக்கான கிரிக்கெட்டில் ஆஸி. வீரர் புதிய சாதனை
|17 Jun 2022 9:35 AM IST
பார்வை குறைபாடு உள்ளோருக்கான ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டெபன் நீரோ 309 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்தார்.
பிரிஸ்பேன்,
பிரிஸ்பேனில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான பார்வை குறைபாடு உள்ளோருக்கான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா 40 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 542 ரன்கள் குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர் ஸ்டெபன் நீரோ 309 ரன்கள் (140 பந்து, 49 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினார். இந்த வகையிலான கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை நீரோ நிகழ்த்தினார். இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 270 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது