< Back
கிரிக்கெட்
வார்னர் சிறந்த அப்பா, சிறந்த கணவர், சகோதரர், மகன் -மனைவி பெருமிதம்
கிரிக்கெட்

வார்னர் சிறந்த அப்பா, சிறந்த கணவர், சகோதரர், மகன் -மனைவி பெருமிதம்

தினத்தந்தி
|
27 Dec 2022 12:45 PM GMT

100வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த 2வது வீரர் என்ற சாதனையை வார்னர் படைத்தார்.

மெல்போர்ன்

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பிரிஸ்பேனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. டாஸ்' ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் முதலில் தென்ஆப்பிரிக்காவை பேட்டிங் செய்ய பணித்தார். இந்த டெஸ்ட் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் வார்னருக்கு 100வது டெஸ்ட் போட்டி ஆகும்.

இதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 68.4 ஓவர்களில் 189 ரன்னில் சுருண்டது. அந்த அணி தரப்பில் வெரைன் 52 ரன், ஜேன்சன் 59 ரன் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேமரூன் கிரீன் 10.4 ஓவர்கள் பந்து வீசி 3 மெய்டனுடன் 27 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 45 ரன் எடுத்திருந்தது. வார்னர் 32 ரன்னுடனும், லபுஸ்சேன் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தொடர்ந்து 2வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.

தொடர்ந்து ஆடிய லபுஸ்சேன் 14 ரன்னில் ரன் அவுட் ஆனார். இதையடுத்து ஸ்டீவ் ஸ்மித் வார்னருடன் ஜோடி சேர்ந்தார். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் ரன் சேகரிப்பில் கவனம் செலுத்தினர். நிதானமான ஆடிய வார்னர் முதலில் சதத்தை பதிவு செய்தார்.

தனது சதத்தை அடித்த பின்னர் அதிரடி காட்டிய டேவிட் வார்னர் அதிரடியாக ஆடி ரன் குவித்ததோடு இரட்டை சதம் அடித்து அசத்தினார். தனது 100வது டெஸ்ட் போட்டியில் ஆடிய வார்னர் அதில் இரட்டை சதம் அடித்து சாதனை புரிந்தார்.

100வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த 2வது வீரர் என்ற சாதனையை வார்னர் படைத்தார். இதற்கு முன் ஜோ ரூட் இந்த சாதனையை படைத்துள்ளர்.

இரட்டை சதம் அடித்த பின் வார்னர் காயம் காரணமாக 'ரிட்டயர்ட் ஹர்ட்' மூலம் வெளியேறினார். அவர் 254 ப்ந்தில் 16 போர், 2 சிக்சருடன் 200 ரன்கள் குவித்தார்.

அவரது 100-வது டெஸ்ட் போட்டியை பார்க்க அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மைதானம் வந்திருந்தனர். அவரது ஆட்டத்தை அவர்கள் அனைவரும் ஆரவாரம் செய்து கொண்டாடினர்.

"மிகவும் பெருமையாகவும், நிம்மதியாகவும் உள்ளது. அவருக்கு வயதாகி விட்டது. ஓய்வு பெற வேண்டும் என்றெல்லாம் அனைவரும் சொல்லி வந்தார்கள். ஆனால் இந்தப் போட்டியில் அவர் 8000 ரன்களை கடந்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார். அதோடு அவர் இரட்டை சதமும் விளாசியுள்ளார்.

தனது ஆதரவாளர்கள் மற்றும் தன்னை விரும்புபவர்களுக்கு முன்னர் இதை செய்தது அவருக்கு ரொம்பவே ஸ்பெஷல். அவரை எண்ணி நாங்கள் அனைவரும் பெருமிதம் கொள்கிறோம். அவர் சிறந்த அப்பா, சிறந்த கணவர், சகோதரர், மகன் என நாங்கள் அனைவரும் சொல்வோம்" என கேண்டிஸ் வார்னர் தெரிவித்துள்ளார்.



மேலும் செய்திகள்