துல்லியமாக யார்க்கர் வீசிய பும்ரா: ஆட்டமிழந்துவிட்டு பாராட்டு தெரிவித்த ஆரோன் பின்ச்- வைரல் வீடியோ
|பின்ச் ஆட்டமிழந்த அடுத்த நொடியே பும்ராவின் பந்துவீச்சுக்கு கைதட்டி பாராட்டு தெரிவித்தார்.
நாக்பூர்,
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. மொகாலியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இன்று 2-வது டி20 போட்டி நடைபெற்றது.
ஆடுகளத்தில் ஈரப்பதம் காரணமாக போட்டி 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு 91 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் அதிரடியால் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பை தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்திய அணியின் யார்க்கர் கிங் பும்ரா இன்றைய போட்டியில் களமிறங்கினார். இன்றைய போட்டியில் 2 ஓவர்கள் வீசிய அவர் 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார்.
இன்றைய போட்டியில் அபாயகரமாக திகழ்ந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் விக்கெட்டை ஜஸ்பிரீத் பும்ரா வீழ்த்தினார். தனது அற்புதமான யார்க்கர் மூலம் பும்ரா, பின்ச்-ஐ போல்டாக்கினார். ஆட்டமிழந்த பின்ச் அடுத்த நொடியே பும்ராவின் பந்துவீச்சுக்கு கைதட்டி பாராட்டு தெரிவித்தார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
B. O. O. M! ⚡️ ⚡️@Jaspritbumrah93 strikes to dismiss Aaron Finch with a cracker of a yorker. #TeamIndia are chipping away here in Nagpur!
— BCCI (@BCCI) September 23, 2022
Follow the match ▶️ https://t.co/LyNJTtkxVv
Don't miss the LIVE coverage of the #INDvAUS match on @StarSportsIndia pic.twitter.com/omG6LcrkX8