< Back
கிரிக்கெட்
ஆசியகோப்பை சூப்பர்4 சுற்று: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு
கிரிக்கெட்

ஆசியகோப்பை சூப்பர்4 சுற்று: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு

தினத்தந்தி
|
4 Sept 2022 7:10 PM IST

சூப்பர் 4 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.

துபாய்,

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் (20 ஓவர்) போட்டி தொடரில் துபாயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் சூப்பர்4 சுற்று 2-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை லீக் ஆட்டத்தில் மோதிய இவ்விரு அணிகளும் அடுத்த ஒரு வாரத்தில் மீண்டும் ஒருமுறை நேருக்கு நேர் சந்திக்கின்றன. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், 2-வது லீக் ஆட்டத்தில் 40 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கையும் தோற்கடித்து 'ஏ' பிரிவில் முதலிடத்தை பிடித்து சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறியது.

இதனை தொடர்ந்து பாகிஸ்தான் அணியும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. இந்த நிலையில் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

மேலும் செய்திகள்