< Back
கிரிக்கெட்
ஆசியகோப்பை சூப்பர்4 சுற்று: பாகிஸ்தான் வெற்றிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
கிரிக்கெட்

ஆசியகோப்பை சூப்பர்4 சுற்று: பாகிஸ்தான் வெற்றிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

தினத்தந்தி
|
4 Sept 2022 9:24 PM IST

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்துள்ளது.

துபாய்,

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் (20 ஓவர்) போட்டி தொடரில் துபாயில் இன்று நடைபெறும் சூப்பர்4 சுற்று 2-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடியது அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர்.

இருவரும் தலா 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த விராட் கோலி பொறுப்புடன் விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டார். ஆனால் அவருக்கு இணையாக அணியில் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. சூர்யகுமார் யாதவ் 13 ரன்னிலும், ரிஷப் பண்ட் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அதிரடி ஆட்டக்காரரான ஹர்திக் பாண்ட்யா வந்த வேகத்தில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் தனி ஆளாக போராடினார் விராட் கோலி. அரைசதம் கடந்த அவர் 60 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி ஓவரில் ரன் அவுட் ஆனார்.

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது. இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

மேலும் செய்திகள்