< Back
கிரிக்கெட்
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி மீண்டும் மழையால் பாதிக்க வாய்ப்பு

Image : AFP 

கிரிக்கெட்

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி மீண்டும் மழையால் பாதிக்க வாய்ப்பு

தினத்தந்தி
|
7 Sept 2023 6:25 PM IST

இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறும் நாளில், கொழும்புவில் 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

கொழும்பு ,

6 அணிகள் கலந்து கொண்ட ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொண்ட 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டன. இதில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஒரு பிரிவிலும், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஒரு பிரிவிலும் இடம் பெற்றன

இந்த அணிகள் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். அந்த வகையில் இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடித்த பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, வங்காளதேசம் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின.

இதையடுத்து ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கியது. இந்த நிலையில் வரும் 10 ஆம் தேதி நடைபெறும் சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.இந்த போட்டி கொழும்புவில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறும் நாளில், கொழும்புவில் 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

ஏற்கனவே நடந்த இந்தியா - பாகிஸ்தான் லீக் ஆட்டம் பாதியில் மழையால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்