ஆசிய கோப்பை; இலங்கை வீரர் துனித் வெல்லலகே சுழலில் சிக்கிய இந்திய வீரர்கள்..!!
|இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இலங்கை வீரர் துனித் வெல்லலகே 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
கொழும்பு,
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா- இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா களம் இறங்கினர்.
இவர்கள் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் 80 ரன்கள் எடுத்த நிலையில் கில் ஆட்டமிழந்தார். பின்னர் களம் இறங்கிய இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இந்த முறை ஏமாற்றம் அளித்தார். அவர் 3 ரன்கள் எடுத்த நிலையில் துனித் வெல்லலகே பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
அவரையடுத்து அரைசதம் அடித்த நிலையில் ரோகித் ஆட்டமிழந்தார். பின்னர் கிஷன் - ராகுல் ஜோடி சிறிது நேரம் தாக்குபிடித்து ரன்கள் எடுத்தனர். இலங்கை தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லலகே கடும் குடைச்சல் கொடுத்தார். அவரது பந்து வீச்சில் ராகுல் அவுட் ஆனார். பின்னர் களம் இறங்கிய பாண்டியாவும் அவரது பந்து வீச்சுக்கே இரையானார்.
இந்திய அணியின் முதல் 5 வலது கை ஆட்டக்காரர்களையும் துனித் வெல்லலகே வீழ்த்தி அசத்தினார். இடது கை ஆட்டக்காரர்களான கிஷன் மற்றும் ஜடேஜா விக்கெட்டுகளை அசலன்கா வீழ்த்தினார். தற்போது இந்திய அணி 40 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்துள்ளது.
அக்சர் படேல் மற்றும் பும்ரா களத்தில் உள்ளனர். இலங்கை சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லலகே 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.