< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஆசிய கோப்பை: வங்காளதேசத்திற்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சு தேர்வு
|1 Sept 2022 7:21 PM IST
துபாயில் இன்று நடைபெறும் 5வது ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.
துபாய்,
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி பிரிவில் துபாயில் இன்று நடைபெறும் 5வது ஆட்டத்தில் இலங்கை- வங்காளதேச அணிகள் மோதி வருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்குகின்றன.