< Back
கிரிக்கெட்
ஆசிய கோப்பை தொடர்; போட்டி அட்டவணை இந்த வாரம் வெளியாகும்...?-தொடக்க ஆட்டத்தை பாகிஸ்தானில் நடத்த வாய்ப்பு...!
கிரிக்கெட்

ஆசிய கோப்பை தொடர்; போட்டி அட்டவணை இந்த வாரம் வெளியாகும்...?-தொடக்க ஆட்டத்தை பாகிஸ்தானில் நடத்த வாய்ப்பு...!

தினத்தந்தி
|
17 July 2023 7:05 PM IST

ஆசிய கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை இந்த வாரம் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மும்பை,

2023ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடர் இந்த முறை பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்திய அணி பாகிஸ்தானில் ஆசிய கோப்பை நடைபெற்றால் வீரர்களை அனுப்ப மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.

இதையடுத்து இந்திய அணியின் ஆட்டங்களை இலங்கையில் நடத்தவும் மற்ற ஆட்டங்களை பாகிஸ்தானில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிய கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன.

இதில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஒரு பிரிவிலும், இலங்கை, ஆப்கானிஸ்தான் வங்கதேசம் ஒரு பிரிவிலும் உள்ளன.

இந்நிலையில் ஆசிய கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை இந்த வாரம் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 வரை தொடரை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், ஆசிய கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தை பாகிஸ்தானில் நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தானில் தொடக்க ஆட்டம் நடைபெற்றால் பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் ஆடும்.

மேலும் செய்திகள்