< Back
கிரிக்கெட்
பாகிஸ்தானில் ஆசிய கோப்பை தொடர்... ஆனால் இந்தியாவுக்கு மட்டும் வேறு நாட்டில் நடைபெறலாம் என தகவல்
கிரிக்கெட்

பாகிஸ்தானில் ஆசிய கோப்பை தொடர்... ஆனால் இந்தியாவுக்கு மட்டும் வேறு நாட்டில் நடைபெறலாம் என தகவல்

தினத்தந்தி
|
17 Feb 2023 11:07 AM IST

ஆசிய கோப்பை தொடரின் பிரதான போட்டிகள், பாகிஸ்தானில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆசியகோப்பை கிரிக்கெட் தொடரை நடத்த இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்த நிலையில் ஆசிய கோப்பை தொடரின் பிரதான போட்டிகள், பாகிஸ்தானில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால் இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஒருவேளை இந்தியா தகுதி பெறும் பட்சத்தில், இறுதிப் போட்டியும் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே நடைபெறும்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இடம் மாற்றம் குறித்து அடுத்த மாதம் நடக்கும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்