ஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டி - பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இன்று மோதல்
|சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இன்று விளையாடுகின்றன.
துபாய்,
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இதில் 4 அணிகளும் தங்களுக்குள் ஒரு முறை மோத வேண்டும். முடிவில் புள்ளிபட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும்.
ஏற்கனவே இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுப்போட்டிக்கு முன்னேறி விட்டன. இந்த இரு அணிகளும் தலா 2 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ளன. இறுதிபோட்டி வாய்ப்பை இழந்த இந்தியா 1 வெற்றியுடன் 3-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 4-வது இடத்திலும் உள்ளன. இந்நிலையில் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
இன்று நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே இந்த இரு அணிகளும் இறுதிபோட்டிக்கு முன்னேறிவிட்டன. எனவே இந்த ஆட்டம் இறுதிப்போட்டிக்கு ஒரு பயிற்சி ஆட்டமாக பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.