< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ஹாங்காங் பந்துவீச்சு தேர்வு
|31 Aug 2022 7:09 PM IST
டாஸ் வென்ற ஹாங்காங் அணியின் கேப்டன் நிஜாகத் கான் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
துபாய்,
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் துபாயில் இன்று (புதன்கிழமை) நடக்கும் 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- ஹாங்காங் (ஏ பிரிவு) அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பரம போட்டியாளரான பாகிஸ்தானை வீழ்த்தியது. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணி ஹாங்காங்கை எதிர்கொள்வது இதுவே முதல்முறையாகும்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணியின் கேப்டன் நிஜாகத் கான் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.