ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: கொழும்புவில் மழை பெய்ய வாய்ப்பா..?
|ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இன்று இந்தியா- இலங்கை அணிகள் மோத உள்ளன.
கொழும்பு,
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொண்ட ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று கொழும்புவில் நடைபெறுகிறது. இந்த இறுதிப்போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் மோத உள்ளன.
கொழும்புவில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் ஆசிய கோப்பை தொடரின் தொடக்கத்தில் இருந்தே பல ஆட்டங்கள் தடைப்பட்டன. இதனால் ரசிகர்கள் பெரும் கவலை அடைந்தனர்.
இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி மதியம் 2 மணி முதல் 5 மணி வரை 49 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், 6 மணிக்கு 61 சதவீதமும், 7 மணிக்கு 49 சதவீதமும், 8 மணிக்கு 57 சதவீதமும், 9 மணிக்கு 49 சதவீதமும், 10 மணிக்கு 65 சதவீதமும், 11 மணிக்கு 49 சதவீதமும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இறுதிப்போட்டியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.