< Back
கிரிக்கெட்
ஆசிய கோப்பை:  வேகப்பந்து வீச்சாளர்கள் அருமையாக பந்துவீசினர்  - முகமது நபி
கிரிக்கெட்

ஆசிய கோப்பை: வேகப்பந்து வீச்சாளர்கள் அருமையாக பந்துவீசினர் - முகமது நபி

தினத்தந்தி
|
29 Aug 2022 11:08 AM IST

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் அருமையாக பந்துவீசி எதிரணியை நிலைகுலையச் செய்தனர் என முகமது நபி கூறியுள்ளார்.

துபாய்,

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் இலங்கை அணிக்கு எதிராக 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 19.4 வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 10.1 ஒவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 106 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. வெற்றிக்கு பின்னர் அந்த அணியின் கேப்டன் முகமது நபி கூறும்போது,

"இந்த ஆட்டத்தில் எங்கள் அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் அருமையாக பந்துவீசி எதிரணியை நிலைகுலையச் செய்தனர்".

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்