< Back
கிரிக்கெட்
ஆசிய கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் விதி விலக்கு...!

Image Courtesy: AFP  

கிரிக்கெட்

ஆசிய கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் விதி விலக்கு...!

தினத்தந்தி
|
8 Sept 2023 1:38 PM IST

ஆசிய கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் மாற்று நாளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

ஆசிய கோப்பை தொடரில் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு சென்றுள்ளன. இதையடுத்து நடைபெற்ற சூப்பர் 4 சுற்றின் தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் முதல் வெற்றியை பதிவு செய்தது.

சூப்பர் 4 சுற்றில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை - வங்காளதேசம் மோத உள்ளன. நாளை மறுநாள் நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி கொழும்புவில் பாகிஸ்தானை சந்திக்கிறது. வரும் 10-ம் தேதி கொழும்புவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனால் லீக் சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் தடைப்பட்டது போல சூப்பர் 4 சுற்றிலும் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் தடைபட வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர்.

இந்நிலையில் வரும் 10ம் தேதி நடைபெற உள்ள இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் மாற்று நாளில் (ரிசர்வ் டே) 11ம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. மற்ற அணிகள் மோதும் ஆட்டங்களுக்கு ரிசர்வ் டே இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கும் ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்