< Back
கிரிக்கெட்
ஆசியக் கோப்பை கிரிக்கெட் சூப்பர்4 சுற்று: டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சு தேர்வு

image courtesy: Sri Lanka Cricket twitter

கிரிக்கெட்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் சூப்பர்4 சுற்று: டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சு தேர்வு

தினத்தந்தி
|
3 Sept 2022 7:15 PM IST

ஆசியக் கோப்பை கிரிக்கெட் சூப்பர்4 சுற்று முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-இலங்கை அணிகள் மோதுகின்றன.

சார்ஜா,

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றுடன் லீக் சுற்று நிறைவடைந்தது. இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

இந்த நிலையில் சூப்பர்4 சுற்று போட்டிகள் இன்று தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-இலங்கை அணிகள் சார்ஜாவில் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

மேலும் செய்திகள்