< Back
கிரிக்கெட்
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

Image Courtesy: ICC Twitter

கிரிக்கெட்

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

தினத்தந்தி
|
6 Sept 2022 7:04 PM IST

ஆசிய கோப்பை கிரிக்கெட் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

துபாய்,

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

சூப்பர் 4 சுற்றில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக போராடி தோல்வி அடைந்தது. இதில் இந்திய அணி 181 ரன்கள் குவித்த போதிலும் பாகிஸ்தான் ஒரு பந்து மீதம் வைத்து இலக்கை அடைந்து விட்டது. இந்த தோல்வியால் கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் இந்திய அணி எஞ்சிய இரு ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும்.

இந்த நிலையில் இந்திய அணி துபாயில் இன்று நடக்கும் சூப்பர்4 சுற்று ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.

மேலும் செய்திகள்