< Back
கிரிக்கெட்
ஆசிய கோப்பை கிரிக்கெட்; டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு..!!

image courtesy; twitter/@ICC


கிரிக்கெட்

ஆசிய கோப்பை கிரிக்கெட்; டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு..!!

தினத்தந்தி
|
5 Sept 2023 2:41 PM IST

ஆசிய கோப்பை தொடரில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

லாகூர்,

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் கடைசி லீக் போட்டியில் (பி பிரிவு) நடப்பு சாம்பியன் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கையும், ஹஷ்மத்துல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தானும் மோதுகின்றன. இந்த பிரிவில் இலங்கை அணி தனது முதல் ஆட்டத்தில் வங்காளதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து வங்காளதேசம் 89 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை பதம் பார்த்தது.

இன்றைய ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்றால் அந்த அணியுடன் வங்காளதேசமும் சேர்ந்து சிக்கலின்றி சூப்பர்4 சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும். மாறாக ஆப்கானிஸ்தான் வெற்றி கண்டால் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வி என்று சமநிலையுடன் இருக்கும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் இரு அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தேர்வாகும். தற்போதைய சூழலில் இலங்கையின் ரன்ரேட் (+.0.951) வலுவாக உள்ளது. ஆனால் ஆப்கானிஸ்தானின் ரன்ரேட் மோசமாக (-1.780) உள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு சூப்பர்4 சுற்று அதிர்ஷ்டம் கிட்ட வேண்டும் என்றால் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டும்.

இந்நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. டாஸில் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு;-

ஆப்கானிஸ்தான் : ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி(கேப்டன்), நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, குல்பாடின் நைப், கரீம் ஜனத், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், பசல்ஹாக் பரூக்கி.

இலங்கை: பதும் நிசங்கா, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனகா(கேப்டன்), துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷனா, கசுன் ரஜிதா, மதீஷா பதிரனா.

மேலும் செய்திகள்