ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்; ஷகிப் தலைமையிலான வங்காளதேச அணி அறிவிப்பு...!
|ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
டாக்கா,
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ந் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்நிலையில் இந்த தொடருக்கான அணிகளை அந்தந்த நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. இந்த தொடருக்கான பாகிஸ்தான அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை தொடருக்கான வங்காளதேச அணி விவரம்:
ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), லிட்டன் தாஸ், தன்ஜித் ஹசன் தமீம், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தவ்ஹித் ஹிரிடோய், முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது, முஸ்தபிசுர் ரஹ்மான், ஹசன் மம்ஹூத், மஹேதி ஹசன், நசும் அகமது, ஷமிம் ஹொசைன், ஆபிப் ஹொசைன், ஷோரிபுல் இஸ்லாம், எபடோட் ஹொசைன், முகமது நைம்.