ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு
|ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
துபாய்,
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
தற்போதைய நிலையில் இலங்கை அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் விளையாடி வெற்றி பெற்று 2 வது இடத்தில் உள்ளது. இந்திய அணி 2 தோல்விகளுடன் 3 வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 1 தோல்வியுடன் 4 வது இடத்திலும் உள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும். ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பில் நீடிக்கும். அதனால் இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.
இரு அணிகளையும் விட இந்திய அணிக்கு இந்த ஆட்டம் மிக முக்கியமாகும். இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்தால் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் இறுதிபோட்டிக்கு முன்னேறாது. அதனால் இந்த ஆட்டம் இந்திய அணிக்கு மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.