< Back
கிரிக்கெட்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு..!!

image courtesy; twitter/@BCCI

கிரிக்கெட்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு..!!

தினத்தந்தி
|
4 Sept 2023 2:44 PM IST

ஆசிய கோப்பை தொடரில் இந்தியா- நேபாளம் இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

பல்லகெலெ,

ஆசிய கோப்பை தொடரில் பல்லகெலெவில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்தியா - நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியமான ஆட்டமாகும். இதில் வெற்றி பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.

அதன் படி இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. டாஸில் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் ஒரே மாற்றமாக பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி சேர்க்கப்பட்டுள்ளார்.

இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு;-

இந்தியா; ரோகித் சர்மா(கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.

நேபாளம் : குஷால் புர்டெல், ஆசிப் ஷேக், ரோகித் பவுடல் (கேப்டன்), பீம் ஷர்கி, சோம்பால் கமி, குல்சன் ஜா, திபேந்திர சிங் ஐரி, குஷால் மல்லா, சந்தீப் லாமிச்சானே, கரண் கேசி, லலித் ராஜ்பன்ஷி

மேலும் செய்திகள்