< Back
கிரிக்கெட்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்தியா-நேபாளம் அணிகள் இன்று மோதல்
கிரிக்கெட்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்தியா-நேபாளம் அணிகள் இன்று மோதல்

தினத்தந்தி
|
4 Sept 2023 5:31 AM IST

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.

பல்லகெலெ,

ஆசிய கோப்பை தொடரில் பல்லகெலெவில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்தியா - நேபாளம் அணிகள் மோதுகின்றன. முன்னதாக நேற்று முன்தினம் இதே மைதானத்தில் மிகவும் எதிர்பார்த்த இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 266 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து பாகிஸ்தான் தனது இன்னிங்சை தொடங்குவதற்கு முன்னர் தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று இந்தியா-நேபாளம் இடையிலான ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியமான ஆட்டமாகும். இதில் வெற்றி பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். இதனிடையே பல்லகெலெவில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

எனவே மழை காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்ததால் நேபாளம் அணி தொடரை விட்டு வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்