< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஆசிய கோப்பை கிரிக்கெட்: நோபாள வீரர்களுக்கு பதக்கம் அணிவித்து கௌரவித்த இந்திய வீரர்கள்.!
|6 Sept 2023 12:34 AM IST
நேபாளம் அணி வீரர்களுக்கு இந்திய அணி சார்பில் பதக்கம் வழங்கப்பட்டது.
பல்லேகேலே,
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - நேபாளம் அணிகள் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டு விளையாடிய நேபாளம் அணி வீரர்களுக்கு இந்திய அணி சார்பில் பதக்கம் வழங்கப்பட்டது. ஆல் ரவுண்டர் சோம்பால் காமிக்கு ஹர்திக் பாண்ட்யாவும் அரை சதம் விளாசிய ஆசிப் ஷேக்கிற்கு விராட் கோலியும் பதக்கம் வழங்கினார். இந்த தருணத்தை நேபாளம் அணி தங்களது டுவிட்டரில் பதிவிட்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.