< Back
கிரிக்கெட்
ஆசிய கோப்பை கிரிக்கெட்; இந்தியா-இலங்கை ஆட்டம் மழையால் நிறுத்தம்
கிரிக்கெட்

ஆசிய கோப்பை கிரிக்கெட்; இந்தியா-இலங்கை ஆட்டம் மழையால் நிறுத்தம்

தினத்தந்தி
|
12 Sept 2023 6:37 PM IST

இந்திய அணி 47 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் எடுத்துள்ளது.

கொழும்பு,

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்4 சுற்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் ஆட்டத்தில் இந்தியாவும், நடப்பு சாம்பியன் இலங்கையும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இந்திய அணியில் ஒரே மாற்றமாக ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அக்சர் படேல் இடம்பிடித்துள்ளார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இதில் சுப்மன் கில் 19 ரன்களில் போல்ட் ஆனதைத் தொடர்ந்து அடுத்து களமிறங்கிய விராட் கோலி 3 ரன்களில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

மறுபுறம் அரைசதத்தைக் கடந்த ரோகித் சர்மா 53 ரன்களில் போல்ட் ஆனார். சற்று நிதானமாக ஆடிய இஷான் கிஷன் 33 ரன்களிலும், கே.எல்.ராகுல் 39 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர். தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில், இந்திய அணி 47 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது. இதனிடையே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்