< Back
கிரிக்கெட்
ஆசியக்கோப்பை கிரிக்கெட்; வங்காளதேச அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் விலகல்

image courtesy; twitter/@ICC

கிரிக்கெட்

ஆசியக்கோப்பை கிரிக்கெட்; வங்காளதேச அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் விலகல்

தினத்தந்தி
|
22 Aug 2023 4:10 PM IST

ஆசியக்கோப்பை தொடருக்கான வங்காளதேச அணியிலிருந்து காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் எபடோட் ஹொசைன் விலகியுள்ளார்.

டாக்கா,

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ந் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன.

அதில் பங்குபெறும் ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்காளதேச அணி கடந்த 12ஆம் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அதில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் எபடோட் ஹொசைன் காயம் காரணமாக விலகியுள்ளார்.

எபடோட், கடந்த மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது மூட்டு பகுதியில் காயம் அடைந்தார். இது குணமாக குறைந்தது ஆறு வாரங்கள் ஆகும் என்பதால் வரவிருக்கும் உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டு அவருக்கு ஆசிய கோப்பையில் ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.

எபடோட்டுக்கு மாற்று வீரராக 20 வயது நிரம்பிய வேகப்பந்து வீச்சாளர் தன்சிம் ஹசன் சாகிப் அறிமுக வீரராக அணியில் இடம்பிடித்துள்ளார். இவர் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற 'யு19'உலகக்கோப்பை தொடரில் வங்காளதேசம் கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார். மேலும் சமீபத்தில் முடிவடைந்த வளர்ந்து வரும் ஆண்கள் ஆசியக்கோப்பையில் 3 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மேலும் செய்திகள்