ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிப்பு
|ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி வீரர்களின் விவரங்களை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
கராச்சி,
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 27-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 11-ந்தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கின்றன. ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஆகஸ்ட் 28 -ந் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், இந்த தொடருக்கு வலுவான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி கழற்றி விடப்பட்டு, நசீம் ஷா சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் காயத்தால் ஒதுங்கிய வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி அணியில் இடத்தை தக்கவைத்துள்ளார்.
பாகிஸ்தான் அணி வருமாறு:- பாபர் அசாம் (கேப்டன்), ஷதப் கான் (துணை கேப்டன்), பஹர் ஜமான், ஹரிஸ் ரவுப், குஷ்தில் ஷா, ஹைதர் அலி, இப்திகார் அகமது, முகமது நவாஸ், ஆசிப் அலி, முகமது ரிஸ்வான், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, ஷகீன் ஷா அப்ரிடி, ஷனாவாஸ் தஹானி, உஸ்மான் காதிர்.
முன்னதாக பாகிஸ்தான் அணி வருகிற 16-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நெதர்லாந்தில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இந்த தொடரிலும் பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் அணி களம் இறங்குகிறது.