ஆசிய கோப்பை: இலங்கைக்கு எதிராக டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சு தேர்வு..!
|ஆசிய கோப்பை தொடரில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் சூப்பர் 4 சுற்றை எட்டியுள்ளன.
கொழும்பு,
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை இலங்கை மற்றும் பாகிஸ்தான் இணைந்து நடத்துகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் சூப்பர்4 சுற்றை எட்டியுள்ளன. சூப்பர்4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.
சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தை வீழ்த்தி இருந்தது. இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கும் சூப்பர்4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இலங்கையும், வங்காளதேசமும் மோதுகின்றன.
இதையடுத்து இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாசில் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.