< Back
கிரிக்கெட்
ஆசிய கோப்பை: இலங்கைக்கு 184 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வங்காளதேசம்
கிரிக்கெட்

ஆசிய கோப்பை: இலங்கைக்கு 184 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வங்காளதேசம்

தினத்தந்தி
|
1 Sept 2022 9:47 PM IST

வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது.

துபாய்,

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி பிரிவில் துபாயில் இன்று நடைபெறும் 5வது ஆட்டத்தில் இலங்கை- வங்காளதேச அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடியது. இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இரு அணிகளும் விளையாடின.

வங்காளதேச அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும், இறுதியில் அதிரடி காட்டியது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக அபிப் ஹுசேன் 39 ரன்களும், தொடக்க வீரர் மெகதி ஹசன் 38 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடி வருகிறது.

மேலும் செய்திகள்