< Back
கிரிக்கெட்
ஆசிய கோப்பை; இரண்டு ஆட்டங்களுக்குப் பிறகு கே.எல்.ராகுல் உடல்தகுதியுடன் இருப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை - இந்திய முன்னாள் வீரர்
கிரிக்கெட்

ஆசிய கோப்பை; இரண்டு ஆட்டங்களுக்குப் பிறகு கே.எல்.ராகுல் உடல்தகுதியுடன் இருப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை - இந்திய முன்னாள் வீரர்

தினத்தந்தி
|
30 Aug 2023 10:42 AM IST

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் முதல் இரு லீக் ஆட்டங்களில் கே.எல்.ராகுல் ஆட மாட்டார் என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்த முறை ஆசிய கோப்பை 50 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது.

தொடரில் இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-நேபாளம் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இன்று மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த கே.எல்.ராகுல் முதல் இரு ஆட்டங்களில் ஆட மாட்டார் என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நேற்று தெரிவித்தார். இதனால் அவருக்கு பதிலாக கிட்டத்தட்ட இஷான் கிஷன் களம் இறங்குவது உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் இரண்டு ஆட்டங்களுக்கு பின்னர் ராகுல் முழு உடல்தகுதியுடன் இருப்பார் என்பதற்கு எந்த வித உத்தரவாதமும் இல்லை என இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

கே.எல்.ராகுல் முதல் இரு ஆட்டங்களில் ஆட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதன் அர்த்தம் என்னவென்றால் அவரது காயம் மேலும் அதிகரிக்கலாம். இப்போது அவர் உடற்தகுதியுடன் இல்லையெனில் இரண்டு ஆட்டங்களுக்கு பின்னர் முழு உடல்தகுதியுடன் இருப்பார் என்பதற்கு எந்த வித உத்தரவாதமும் இல்லை.

இந்திய ரசிகர்களுக்கு இந்த செய்தி நல்லதல்ல. ஏனெனில் ஒருநாள் போட்டிகளில் ராகுல் 5வது இடத்தில் மிக சிறப்பாக விளையாடுகிறார். அவரது புள்ளிவிவரங்கள் மிகவும் நன்றாக உள்ளன. கே.எல்.ராகுலால் பெரிய ஷாட்களை ஆடவும், இன்னிங்ஸை நிலைப்படுத்தவும் தெரியும். ராகுல் விக்கெட் கீப்பிங்கைத் தவிர, இறுதி கட்டத்தில் சிறப்பாக ஆடுவார்.

கில்லின் பார்ம் சற்று குறைந்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் அவர் சிறப்பாக செயல்படவில்லை, ஆனால் கண்டி ஆடுகளம் அவருக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவர் வேகமான மற்றும் பவுன்ஸ் பிட்ச்களை அதிகமாக விரும்புவார். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்