< Back
கிரிக்கெட்
வங்காளதேச டெஸ்ட் தொடரில் அஸ்வின் படைக்க உள்ள மாபெரும் சாதனைகள்

image courtesy: AFP

கிரிக்கெட்

வங்காளதேச டெஸ்ட் தொடரில் அஸ்வின் படைக்க உள்ள மாபெரும் சாதனைகள்

தினத்தந்தி
|
17 Sept 2024 7:57 AM IST

இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது.

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் வங்காளதேசத்திற்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 19-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த தொடரில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் 3 மாபெரும் சாதனைகள் படைக்க வாய்ப்புள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-

1. டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்காளதேசத்துக்கு எதிராக முன்னாள் ஜாம்பவான் வீரர் ஜாகீர் கான் 31 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதனால் வங்காளதேசத்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பவுலராகவும் அவர் சாதனை படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ரவிச்சந்திரன் அஸ்வின் 23* விக்கெட்டுகளுடன் 2வது இடத்தில் உள்ளார். எனவே இந்த தொடரில் 9 விக்கெட்டுகள் எடுக்கும் பட்சத்தில் ஜாகீர் கானை முந்தி வங்காளதேசத்துக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரராக அஸ்வின் வரலாற்று சாதனை

2. அதே போல 2023 - 25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை அதிக விக்கெட்டுகள் (51*) எடுத்த வீரராக ஆஸ்திரேலியாவின் ஜோஸ் ஹேசல்வுட் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் ரவிச்சந்திரன் 42 விக்கெட்டுகளுடன் 2வது இடத்தில் உள்ளார். எனவே இந்த தொடரில் இன்னும் 10 விக்கெட்டுகள் எடுத்தால் 2023 - 25 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராக அஸ்வின் சாதனை படைப்பார்.

3. டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்களின் வரிசையில் நாதன் லயனுடன் அஸ்வின் (10 முறை) முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த தொடரில் ஒரு முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரராக சாதனை படைப்பார்.

மேலும் செய்திகள்