உலகக்கோப்பை தொடருக்கான அணியில் அஷ்வின் - இந்திய அணியை தேர்வு செய்த முன்னாள் தேர்வுக்குழு தலைவர்
|இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
மும்பை,
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
இதையடுத்து உலகக்கோப்பை தொடருக்கு அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. உலகக்கோப்பை தொடர் நெருங்குவதையொட்டி பல முன்னாள் வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள், பட்டம் வெல்ல தகுதியான அணிகள் குறித்து தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உலக கோப்பையில் விளையாடப் போகும் இந்திய அணியில் இடம் பெற வேண்டிய வீரர்கள் குறித்து இந்திய முன்னாள் வீரர்கள் தாங்கள் தேர்வு செய்த 15 வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய தேர்வுக்குழுவின் முன்னாள் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் உலகக்கோப்பை தொடருக்கான தான் தேர்வு செய்த அணியை அறிவித்துள்ளார்.
அவர் தேர்வு செய்த அணியில் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயஸ் அய்யர், கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்த்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோரும், பந்து வீச்சாளர்களாக ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ் அல்லது யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் உள்ளிட்ட 15 வீரர்களை தேர்வு செய்துள்ளார்.
எம்.எஸ்.கே. பிரசாத் தேர்வு செய்த உலகக்கோப்பை அணி விவரம்:- ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயஸ் அய்யர், கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்த்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ் அல்லது யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் .