ஆஷஸ் டெஸ்ட்; மைதானத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்...குண்டுகட்டாக தூக்கி சென்ற பேர்ஸ்டோவ் - வீடியோ...!
|முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.
லண்டன்,
5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் ஓவரை ஆண்டர்சன் வீசினார்.
இந்த ஓவர் முடிந்த நிலையில் மைதானத்திற்கு வெளியே இருந்து சில போராட்டக்காரர்கள் மைதானத்துக்குள் நுழைந்தனர். அப்போது பென் ஸ்டோக்ஸ் மற்றும் பேர்ஸ்டோவ் அவர்களை தடுத்து நிறுத்தினர். அவர்கள் கையில் வைத்திருந்த வர்ண பொடியை மைதானத்தில் தூவினர்.
பேர்ஸ்டோவ் ஒரு நபரை குண்டுக்கட்டாக தூக்கி மைதானத்துக்கு வெளியே கொண்டு சென்று விட்டு வந்தார். அதன் பிறகு தனது டீஷர்ட் மற்றும் கையுறை ஆகியவை வர்ண பொடியால் அழுக்கான நிலையில் டிரெஸிங் ரூம் சென்று மாற்றிவிட்டு மீண்டும் வந்தார். இதனால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. தற்போது அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.