< Back
கிரிக்கெட்
ஆஷஸ் தொடர்: 4வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு...!

Image Courtesy: @englandcricket

கிரிக்கெட்

ஆஷஸ் தொடர்: 4வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு...!

தினத்தந்தி
|
11 July 2023 6:19 PM IST

நடப்பு ஆஷஸ் தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது.

லண்டன்,

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷ்ஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 3வது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் முடிவில் 2-1 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நீடிக்கிறார்.

4வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி விவரம்:

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், பேர்ஸ்டோ, ஸ்டூவர்ட் பிராட், ஹாரி புரூக், ஜேக் க்ராவ்லி, பென் டக்கட், டேன் லாரன்ஸ், ஓலி ராபின்சன், ஜோ ரூட், ஜோஷ் டங், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.



மேலும் செய்திகள்