ஆஷஸ் 4-வது டெஸ்ட்; டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு...!!
|ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்து உள்ளார்.
மான்செஸ்டர்,
பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. அனல் பறக்கும் இந்த தொடரில் முதல் இரு டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், திரில்லிங்கான 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றியை ருசித்தன. தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் இன்று தொடங்குகிறது.
போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸில் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்து உள்ளார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்ய உள்ளது.
இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு;
இங்கிலாந்து (பிளேயிங் லெவன்): பென் டக்கெட், சாக் கிராலி, மொயின் அலி, ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ்(சி), ஜானி பேர்ஸ்டோவ்(விகே), கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
ஆஸ்திரேலியா (பிளேயிங் லெவன்): டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுச்சேனே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (விகே), பாட் கம்மின்ஸ் (சி), மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட்