< Back
கிரிக்கெட்
கடைசி ஓவரில் ஜொலித்த அர்ஷ்தீப் சிங்..! மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அசத்தல் வெற்றி
கிரிக்கெட்

கடைசி ஓவரில் ஜொலித்த அர்ஷ்தீப் சிங்..! மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அசத்தல் வெற்றி

தினத்தந்தி
|
22 April 2023 5:54 PM GMT

மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 201 ரன்கள் எடுத்தது

மும்பை ,

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமயிலான மும்பை அணியும் , சாம் கரன் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி அந்த பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக மேத்யூ ஷார்ட் , பிரப் சிம்ரன் சிங் களமிறங்கினர். தொடக்கத்தில் மேத்யூ ஷார்ட் 11 ரன்களில் கிரீன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பிரப் சிம்ரன் சிங் 26 ரன்களில் அர்ஜுன் தெண்டுல்கர் ஓவரில் வெளியேறினார்

தொடர்ந்து லியாம் லிவிங்ஸ்டன் 10 ரன்களும் , அதர்வ தைடே 29 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து ஹரிபிரீத் சிங் , சாம் கரன்'இருவரும் இனைந்து மும்பை அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். அர்ஜுன் தெண்டுல்கர் வீசிய ஒரே ஓவரில் 4 பவுண்டரி , 2 சிக்ஸர்கள் பறக்க விட்டனர்.

சிறப்பாக'விளையாடிய ஹர்பிரீத் சிங் 28 பந்துகளில் 41 ரன்களுக்கு கிரீன் ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜிதேஷ் ஷர்மா களமிறங்கினார், கிரீன் வீசிய அந்த ஓவரில் சாம் கரன் 2சிக்சரும் , ஜிதேஷ் சர்மா 2 சிக்ஸர்கள் பறக்க விட்டனர்.அதிரடி காட்டிய சாம் கரன் அரைசதம் அடித்தார்.அவர் 29 பந்துகளில் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்,மறுபுறம் சிக்ஸர்கள் பறக்க விட்ட ஜிதேஷ் ஷர்மா 25 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 214 ரன்கள் குவித்தது.தொடர்ந்து 215ரன்கள் இலக்குடன் மும்பை அணி விளையாடியது.

தொடக்க வீரர்களாக இஷான் கிஷான் , ரோகித் சர்மா களமிறங்கினர். தொடக்கத்தில் இஷான் 1 ரன்களில் வெளியேறினார். பின்னர் ரோகித் சர்மா , கேமரூன் கிரீன் இணைந்து அதிரடி காட்டினர்.

பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய இருவரும் நிலைத்து ஆடினர். அணியின் ஸ்கோர் 84 ரன்களாக இருந்த போது ரோகித் சர்மா 44 ரன்களில் வெளியேறினார்.

அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் பஞ்சாப் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். மறுபுறம் அரைசதம் கடந்த கிரீன் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து ஆடிய அவர் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் மும்பை அணிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். டிம் டேவிட் , திலக் வர்மா களத்தில் இருந்தனர்,அந்த ஓவரை சிறப்பாக வீசிய அர்ஷிதீப் சிங் திலக் வர்மா , வாதோரா ஆகியோர் விக்கெட்டை வீழ்த்தி 2 ரன்கள் மட்டும் விட்டுகொடுத்தார்.

இதனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 201 ரன்கள் எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

மேலும் செய்திகள்