< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஐபிஎல் நிறைவு நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான்...
|28 May 2022 9:18 PM IST
ஐபிஎல் நிறைவு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியானது நடைபெற உள்ளது.
அகமதாபாத்,
ஐபிஎல் நிறைவு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியானது நடைபெற உள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடர் நாளையுடன் நிறைவு பெறுகிறது. அகமதாபாத்தில் நாளை நடைபெற இருக்கும் இறுதி போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கோப்பைக்காக மல்லுக்கட்டுகின்றன.
இந்த போட்டிக்கு முன்பாக இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோர் மேடையை கலக்க உள்ளனர்.