< Back
கிரிக்கெட்
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் மற்றொரு வரலாற்று சாதனை படைத்த ஜோ ரூட்
கிரிக்கெட்

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் மற்றொரு வரலாற்று சாதனை படைத்த ஜோ ரூட்

தினத்தந்தி
|
9 Sept 2024 7:33 PM IST

இலங்கை - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஜோ ரூட் மற்றும் கமிந்து மென்டிஸ் தொடர் நாயகன் விருது வென்று அசத்தினர்.

லண்டன்,

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இதில் கடைசி டெஸ்ட் போட்டியில் மட்டுமே தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஜோ ரூட் மற்றும் இலங்கை அணியில் சிறப்பாக செயல்பட்ட கமிந்து மென்டிஸ் இருவரும் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டனர்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் தொடர் நாயகன் விருதை வெல்வது 6-வது முறையாகும். இதன் மூலம் இங்கிலாந்து டெஸ்ட் வரலாற்றில் அதிக முறை தொடர் நாயகன் விருது வென்ற வீரர் என்ற மாபெரும் சாதனையை ரூட் படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:-

1. ரூட் - 6 முறை

2. கிரகாம் கூச்/ ஸ்டிராஸ்/ஜேம்ஸ் ஆண்டர்சன் - 5 முறை.

மேலும் செய்திகள்