சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் மற்றொரு இங்கிலாந்து வீரர் - ரசிகர்கள் அதிர்ச்சி...!
|இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் பின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
லண்டன்,
இங்கிலாந்து அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் பின். இவருக்கு வயது 34. கடந்த 2010ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆனார்.
இவர் இங்கிலாந்து அணிக்காக 36 டெஸ்ட், 69 ஒருநாள் மற்றும் 21 டி20 போட்டிகளில் ஆடி மொத்தமாக 254 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இவர் கடைசியாக இங்கிலாந்து அணிக்காக 2017-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடினார்.
கடந்த 6 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக எந்தவித சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் இடம் பெறாத ஸ்டீவன், இன்று சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் இங்கிலாந்து அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேல்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும், மொயீன் அலி டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தனர். தற்போது ஸ்டீவன் பின்னும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதால் இங்கிலாந்து ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.