< Back
கிரிக்கெட்
அடுத்த 2 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு... எங்கெல்லாம் தெரியுமா..?
கிரிக்கெட்

அடுத்த 2 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு... எங்கெல்லாம் தெரியுமா..?

தினத்தந்தி
|
30 July 2024 7:21 AM IST

ஆசிய கோப்பை தொடரின் அடுத்த 2 சீசன்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. ஐ.சி.சி. தொடர்களில் ஆசிய அணிகள் சிறப்பாக செயல்படும் பொருட்டு இந்த தொடர் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலால் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வருடம் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரின் அடுத்த 2 சீசன்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டில் (2025) இந்தியாவில் நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. 2026-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளதாக 20 ஓவர் வடிவில் நடத்தப்பட உள்ளது.

இதே போல் 2027-ம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டி வங்காளதேசத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2027-ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெற இருப்பதால் அது 50 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது.

மேலும் செய்திகள்