< Back
கிரிக்கெட்
கோவையில் நடக்கும் ரஞ்சி கிரிக்கெட்டில் ஆந்திர அணி 277 ரன்கள் சேர்ப்பு

கோப்புப்படம் 

கிரிக்கெட்

கோவையில் நடக்கும் ரஞ்சி கிரிக்கெட்டில் ஆந்திர அணி 277 ரன்கள் சேர்ப்பு

தினத்தந்தி
|
21 Dec 2022 5:10 AM IST

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்தது.

கோவை,

38 அணிகள் பங்கேற்றுள்ள ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பை-ஐதராபாத் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) மும்பையில் நேற்று தொடங்கியது.

இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 457 ரன்கள் குவித்தது. முதல்தர கிரிக்கெட்டில் தனது 38-வது சதத்தை பதிவு செய்த கேப்டன் ரஹானே 139 ரன்களுடனும் (190 பந்து, 18 பவுண்டரி, 2 சிக்சர்), சர்ப்ராஸ் கான் 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முன்னதாக சூர்யகுமார் யாதவ் 90 ரன்களும் (80 பந்து, 15 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஜெய்ஸ்வால் 162 ரன்களும் விளாசி அவுட் ஆனார்கள்.

முதல் ஆட்டத்தில் ஐதராபாத்துடன் 'டிரா' கண்டு இருந்த தமிழக அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் (பி பிரிவு) ஆந்திராவை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. கோவையில் ரஞ்சி கிரிக்கெட் நடப்பது 32 ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அபிஷேக் ரெட்டி 85 ரன்னும், ரிக்கி புய் 68 ரன்னும் சேர்த்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

மேலும் செய்திகள்